தமிழகத்தில் செப்.,1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் சூசகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 1:57 pm
Anbil Mahesh -Updatenews360
Quick Share

சென்னை : செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, செப்.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரையை தொடர்ந்து, திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பால் பள்ளிகள் திறப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

Views: - 275

0

1