திட்டமிட்டபடி நாளை 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன்..!!

7 February 2021, 1:15 pm
minister senkottaiyan - updatenews360
Quick Share

சென்னை: திட்டமிட்டப்படி நாளை 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பாடத்திட்டங்களை குறைத்துள்ளதால், பள்ளி திறப்பை மேலும் தாமதம் செய்ய முடியாது. பிற வகுப்புகளை திறக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றும், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0