மசினகுடியில் யானைக்கு தீ வைத்த விவகாரம்: 55 சொகுசு விடுதிகளுக்கு சீல்…அதிகாரிகள் அதிரடி…!!

29 January 2021, 10:30 am
resort5 - updatenews360
Quick Share

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி மாவனல்லா பகுதியில் விதிமுறைகளை மீறி நடந்து வந்த 55 சொகுசு விடுதிகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் மற்றும் பொக்காபுரம் போன்ற பகுதிகளில் அதிகளவிலான தனியார் ரெசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.

காயத்துடன் சுற்றி வந்த ஆண் காட்டு யானை ஒன்று உணவு தேடி கடந்த வாரம் மாவனல்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி வளாகத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்த சிலர் யானையை விரட்டி, அதன் மீது எரியும் டயரை வீசியுள்ளனர். உடலில் பற்றி எரியும் தீயுடன் யானை பிளிறிக்கொண்டு ஓடிய வீடியோ வெளியாகி அனைவரையும் மனதையும் கரையச் செய்தது. யானையின் இறப்புக்கு காரணமான 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

resort2 - updatenews360

தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். யானைக்கு தீ வைத்த சம்பவம் நடந்த அந்த தனியார் தங்கும் விடுதி, அனுமதியின்றி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து இரவோடு இரவாக அதற்கு சீல்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றனவா என வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளை கொண்ட குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில் மாவனல்லா பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டுவந்த அதிர்ச்சியான சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 55 தனியார் விடுதிகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் உரிய உரிமமின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.

Views: - 0

0

0