ரஸ்க் சாப்பிட ரிஸ்க் எடுக்கணுமா?: தரமற்ற முறையில் ரஸ்க் தயாரிப்பு…கம்பெனியை இழுத்து பூட்டிய அதிகாரிகள்..!!

Author: Aarthi Sivakumar
19 September 2021, 4:33 pm
Quick Share

காரைக்குடி: தரமற்ற முறையில் தரையில் கொட்டி ரஸ்குகள் தயாரித்த கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சமீபத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காரைக்குடியில் உள்ள 10 ரஸ்க் கம்பெனிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிவதாலும் சோதனை துரிதப்படுத்தப்பட்டது. உணவுப்பொருள் மற்றும் கலப்பட தடுப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சார்லஸ் அமுல் ரஸ்க் கம்பெனியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு உள்ளே நுழைந்த கணமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பேக் செய்து கொண்டிருந்தனர். இதனை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, சுகாதாரமின்றி தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 250 கிலோ ரஸ்குகளை பறிமுதல் செய்தனர். அதோடு மட்டுமில்லாமல், கம்பெனியை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். மேலும், 8 ரஸ்க் ஆலைகளில் சோதனை நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பானிபூரியை தொடர்ந்து ரஸ்க் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் இனி ரிஸ்கே வந்தாலும் ரஸ்க் சாப்பிட கூடாது என விமர்சித்து வருகின்றனர்.

Views: - 328

0

0