இரண்டாவது நாளாக தொடரும் தங்க கடத்தல்: திருச்சி வந்த விமானத்தில் 5,170 கிராம் தங்கம் பறிமுதல்

Author: Udhayakumar Raman
24 June 2021, 4:59 pm
Quick Share

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த 5 பயணிகளிடமிருந்த 5,170 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. விமானத்தில் வந்த
பயணிகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 5 பயணிகளை அழைத்து தனியாக அவருடைய உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களுடைய உடமைகளில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 5,170 கிராம் தங்கம் இருந்ததை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நம்புராஜன்,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பழனி, பெரம்பலூரை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம், நாகராஜன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்தார்களா அல்லது யாரேனும் கொடுத்து அனுப்பினார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு 2 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரத்து 380 என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று சார்ஜாவில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் 6 பேரிடம் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க பிடிபட்ட நிலையில் இன்று தொடர்ந்து ருபாய் 2.48 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 224

0

0