கடத்திவரப்பட்ட 90 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது

Author: Udhayakumar Raman
27 November 2021, 7:34 pm
Quick Share

திருப்பூர்:தாராபுரத்தில் கடத்திவரப்பட்ட 90 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட 5 பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் காரணமாக தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் விஜயபாஸ்கர், செல்லையா, மோகன் மற்றும் போலீசார் தாராபுரம் பழைய அமராவதி ஆற்றுப்பாலம், தாராபுரம் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்ததாக தாராபுரம் டி.கள்ளிபாளையத்தை சேர்ந்த அன்வர்சாத் (வயது 39), தாராபுரத்தை சேர்ந்த அபு பக்கர்சித்திக் (31), ஜாபர் அலி (23), தாராபுரம் ஜமால்புதூரை சேர்ந்த ஷேக்பரீத் (33), கணபதிபாளையத்தை சேர்ந்த துரைசாமி (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 464

0

0