ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த அதிமுக மூத்த தலைவர் : பதறிய நிர்வாகிகள்… துணிச்சலோடு செய்த செயல்.. நெகிழ்ந்த இபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 2:44 pm
Semmalai Dizzy - Updatenews360
Quick Share

சேலம் : எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதிமுக சேலம் புறநகர் மற்றும் மாநகர மாவட்டம் சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போடும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆர்பாட்டத்தின் வாயிலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Do not internet edapadi pazanisami team semmalai MLA || எடப்பாடி அணியுடன்  இணைய வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்து- செம்மலை எம்.எல்.ஏ

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொண்டர்கள் மயங்கி விழுந்த செம்மலையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக தூக்கி சென்றனர்.

அப்போது செம்மலை முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடைக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

Views: - 589

0

0