இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பாட்டில் வீச்சு

4 September 2020, 9:24 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பாட்டில் வீசப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் மாரிமுத்து இவர் சாமுண்டிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் சிலர் பாட்டிலை எரிந்து விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாரிமுத்து வந்த போது வீட்டின் வாசலில் கண்ணாடி பாட்டில் ஒன்று உடைந்து கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பாட்டில் வீசப்பட்ட தகவல் பரவியதை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0