நடிகையின் மறுப்பக்கம் : கணவனை கள்வனாக மாற்றிய சீரியல் நடிகை தலைமறைவு!!

16 September 2020, 1:13 pm
Serial Actress - updatenews360
Quick Share

சென்னை : தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியலில் நடித்த நடிகை ஒருவர் கொள்ளை சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலில் துணை நடிகராக நடித்து வந்தவர் சுசித்ரா. இந்த நிலையில் சீரியல் நடிகைகளை படப்பிடிப்புக்கு அழைத்து செல்ல கார் வந்துபோகும். இந்த காரில் ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மணிகண்டன், ஏற்கனவே திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை விவாகரத்து செய்தவர். இதனால் சென்னையில் வந்து ஓட்டுநராக பணிபுரிய ஆரம்பித்தார். படப்பிடிப்புகளுக்கு வழக்கமாக வரும் ஓட்டுநர் என்பதால், சுசித்ராவும் நட்பாக பழகி நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து நடிகையை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட மணிகண்டன், இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா பொதுமுடக்கம் என்பதால் இருவரும் செலவுக்கு பணமில்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து கடந்த விநாயகர் சதுர்த்தியன்று சொந்த ஊருக்கு நடிகை சுசித்ராவை அழைத்து சென்றார் மணிகண்டன்.

மணிகண்டன் வீட்டில் உள்ள பீரோவில் நகை மற்றும் பணம் இருப்பதை கவனித்த சுசித்ரா, மணிகண்டனிடம் நகை மற்றும பணத்தை வைத்து குறும்படம் தயாரித்து யூடியூப்பில் வெளியிட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து சுசித்ராவை சென்னையில் விட்டுவிட்டு, தனியாக கடலூருக்கு வந்த மணிகண்டன் சொந்த வீட்டிலேயே திருட திட்டம் தீட்டினார். தந்தை தாய் வெளியே வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நேரம் பார்த்து காத்திருந்த மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 18 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை திருடினார்.

இதற்கிடையே பணம் பறிபோனத அறிந்த மணிகண்டன் தாய் மற்றும் தந்தை பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக பண்ஐட்டி ஆய்வாளர் நடத்திய விசாரணையில் மகன் மணிகண்டன் மேல் சந்தேகம் வலுத்தது.

இந்த நிலையில் நகை மற்றும் பணத்தை எடுத்து வந்த மணிகண்டன் மனைவிக்காக காத்திருந்தார். இதையறிந்த போலீசார் மணிகண்டனை சுற்றி வளைத்தனர். இந்த தகவலை அறிந்த சுசித்ரா தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

முதல்கட்ட தகவலில் சீரியல் நடிகையின் உண்மையான பெயர் பரமேஸ்வரி என்று தெரியவந்துள்ளது. குறும்படத்தை தயாரிக்க கணவனையே கள்வனாக மாற்றிய சீரியல் நடிகையின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 2

0

0