பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீர் : நோய் தொற்று ஏற்படும் அபாயம்.. பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 1:52 pm
Drainage -Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் பேருந்து நிலையத்தில் இருந்து தலைமை தபால் நிலையம் உள்ள பிரதான சாலையில் பெரியசாமி பிள்ளைதெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவு நீர் கசிந்து சாலைகளில் வெள்ளம் போல் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

மேலும் பழைய பேட்டை பழைய பஸ் நிலையத்திலிருந்தும். பழையபேட்டை மற்றும் கிராமங்களிலிருந்தும் இருந்தும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் தேங்கும்சாக்கடை கழிவு நீரில் நடந்து செல்வதாகவும், பலமுறை இதுகுறித்துபுகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் லலித் ஆண்டனி தெரிவிக்கையில் அன்னை பாத்திமா மேல்நிலைப் பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள,. அன்னை பாத்திமா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என நான்கு மேல்நிலைப் பள்ளிகளுக்கு வந்து செல்லும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த சாலை வழியாக தினமும் கழிவுநீரை மிதித்துக்கொண்டு தான் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

கொரோனா நோய்ஊரடங்கு காலமான இந்த நேரத்தில் ஆபத்தான சூழ்நிலையில் பள்ளி குழந்தைகள் சாக்கடையை மிதித்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதால் நோய்பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும்.

இதே நிலை நீடித்தால் நான்கு மேல்நிலை பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் எனவும் குழந்தைகள் ஆரோக்கியம்தான் முக்கியம் எனவும் மேலும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Views: - 405

0

0