பள்ளி மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் அத்துமீறல்:வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Author: Udhayakumar Raman
18 October 2021, 6:29 pm
Quick Share

சென்னை: சென்னையில் 12 ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கடந்த 15 ம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் மனுவில் கூறியிருந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து மாணவியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவியை வால்டாக்ஸ் ரோடு மன்னார் தெரு பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற நபர் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவி மற்றும் வசந்த்தை தீவிரமாக தேடி வந்த போலீசார் , இவர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த் சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வசந்த் மீது வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 180

0

0