7 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் : 71 வயது முதியவரின் வெறிச்செயல்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 8:54 pm

பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுஉச்சிமேடு கிராமத்தில் ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி (வயது 70) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்தார்.

குற்றவாளி சன்னியாசிக்கு 5 வருட கடுங்காவல் மற்றும் மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!