கொங்கு மண்டலத்தில் சைலண்ட் விசிட் : டிஜிபி சைலேந்திரபாபு வருகையால் காவல்துறை அலர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 6:14 pm
Dgp Silent Vist -Updatenews360
Quick Share

பல்லடம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் விசிட்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் காவல் நிலையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒன்பதே கால் மணி அளவில் பல்லடம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீரென வருகை தந்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து கோவை சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த அவர் கோவையிலிருந்து போலீஸ் வாகனம் மூலமாக மதுரை செல்லும் வழியில் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீர் வருகை தந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களை பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், உதவியாளர் மற்றும் போலீசார் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உடன் போலீசார் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸ் வாகனத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

பல்லடம் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் வருகையால் பல்லடம் போலீசார் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Views: - 572

0

0