சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : பட்டதாரி இளைஞரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்!!

23 October 2020, 12:11 pm
POCSO arrest - Updatenews360
Quick Share

கோவை : சுந்தராபுரம் அருகே சாலையில் நடந்த சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிசெல்ல முயன்ற பட்டதாரி இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்ல சுந்தராபுரம் பழனியப்பா தியேட்டர் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளனர். மாலை நேரம் என்பதால் சாலை இருட்டாக இருந்துள்ளது.

இதை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சாலையில் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். சிறுமி அலறி சத்தம் போட்டதால் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி சென்றவரை விரட்டி பிடித்தனர்.

இதையடுத்து பிடிபட்ட இளைஞரை குனியமுத்தூர் போலிஸில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இளைஞர் போத்தனூர் கனேசபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுதர்சன் (வயது 28) என்பதும், சமீபத்தில் கல்லூரி படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் ௮டிப்படையில் சுதர்சன் மீது போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர்.

Views: - 14

0

0