வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பெண் வன்கொடுமை சட்டத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

7 July 2021, 8:52 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கணபதி தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி 24 வயதுடைய பெண் கடந்த 4 வருடமாக செல்வகுமார் தனது மனைவியுடன் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறார். செல்வகுமார் ஆட்டோ ஓட்ட சென்ற பின்பு அடிக்கடி அந்த வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் என்ற நபர் செல்வகுமாரின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே இது குறித்து செல்வகுமார் ஜெயக்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வகுமார் ஆட்டோ ஓட்ட சென்ற பின்பு வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஜெயக்குமார் அந்த பெண்ணிடம் தனக்கு முத்தம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.மேலும் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே வேறு வழியின்றி ஜெயக்குமார் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவர் செல்வகுமாருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

உடனடியாக வீட்டிற்கு வந்த செல்வகுமார் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஜெயக்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் குடியிருக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. இதனையடுத்து ஜெயக்குமார் மீது பெண்கள் வண்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் ஜெயக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 137

0

0