மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தமிழக அரசு வேடிக்கை பார்க்காது : கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 11:55 am

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது; தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தாமல் தொண்டாக நினைத்து நடத்த வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள் என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் படிப்போடு கல்வி முடிவதில்லை பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்து விடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவிகளுக்கு மன, உடல்ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு அதை வேடிக்கை பார்க்காது என்றும் எச்சரித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?