திருப்பூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் : நடுக்காட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 6:02 pm

திருப்பூர் : கல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்டி போட்டு கத்தியால் குத்தி கொலை நடந்துள்ளதாகவும், 3 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிபடைகள் அமைப்பு.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!