தமிழிசையின் ZOOM மீட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அருவருக்கத்தக்க செயல் : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 7:51 pm

தமிழிசையின் ZOOM மீட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அருவருக்கத்தக்க செயல் : வைரலாகும் வீடியோ!

தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடி கொண்டிருக்கும்போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவவிட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் தமிழிசை சவுந்தராஜன் பேசும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கிலத்தில் பேசுகிறார்.

அதில் வணக்கம், முதலில் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன்.

ஏனென்றால் நான் தென்சென்னை தொகுதியில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் எனது நண்பர்களை (பொதுமக்கள்) என்னால் சந்திக்க முடியவில்லை. இதனால் நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள நினைத்தேன்.

அதன்படியே Zoom மீட்டிங்கில் உங்களுடன் நான் இணைந்தேன். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து எம்பியாக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மீட்டிங்கை முன்னெடுத்து செல்ல முடியவில்லை.

ஆனால் சில விஷமிகள், எதிரிகள் தலையிட்டு உங்களையும், என்னையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தவறான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது நமக்கு இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான உறவை பிரிக்காது. நன்கு படித்த, நேர்மையான நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் என்பது சுத்தமாகும்.

இதனால் தயவுசெய்து தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள். இன்னொரு நேரத்தில் விஷமிகள் தலையிடு இன்றி நாம் மீட்டிங்கை கனெக்ட் செய்வோம்.

அதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும், தென்சென்னையின் வளர்ச்சிக்கும் ஒன்றாக இணைவோம். உங்களின் சின்னம் தாமரை. லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஆதரவு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!