புரோட்டாவிற்கு பணம் தர மறுத்து கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் : அமமுக நிர்வாகி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 12:57 pm
AMMK Executive Arrest -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் புரோட்டா பார்சல் வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்த அ.மு.மு.க நிர்வாகி கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.

கோவை செட்டிபாளையம், ஹைவே ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பேரூராட்சி செயலாளராக உள்ளார். மேலும் அமேசான் நிறுவனத்தில் சூப்பர்வைசராகவும், தமிழ்நாடு மின்வாரியத்தில் தற்காலிக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று இரவு 11 மணியளவில், செட்டிபாளையம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் புரோட்டா பார்சல் வாங்கி விட்டு பணம் தராமல் கிளம்பியதாக தெரிகிறது.

இதனால் அவரிடம் கடை உரிமையாளர் தனலட்சுமி பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததோடு, கடை உரிமையாளர் தனலட்சுமியை, சரவணன் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து உடனடியாக தனலட்சுமி செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சரவணனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 389

0

0