அறிவுரை கூறியவருக்கு அரிவாள் வெட்டு : ஓட்டுநர் கொலையில் திருப்பம்.. 8 கல்லூரி மாணவர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2021, 9:42 am
Murder - Updatenews360
Quick Share

விருதுநகர் : அறிவுரை கூறிய வேன் ஓட்டுநரை சரமாரியாக கொலை செய்த 8 பேர் கொண்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டப்பகலில் ஒரு கும்பல் ஆனந்தராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி சென்றது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஆன்நதராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் பலியானார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்தனர்.

விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த கொலை சம்பவத்தில் 5 கல்லூரி மாணவர்களை கைது செய்து விசாரித்த போது, போதை மாத்திரையை பயன்படுத்தியதும், அதை வாங்குவதும் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார், வேன் ஓட்டுநர் ஆனந்தராஜ் அறிவுரை வழங்கியதால், அவரை தீர்த்துக்கட்ட எண்ணியதாகவும் கூறினர். மேலும் அவர் இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வாய்ப்புள்ளதால் கொலை செய்ய துணிந்ததாக கூறினர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதால் போதை வஸ்துக்களை விற்பனை செய்தவர் யார் என்றும், எப்படி கிடைத்தது என்ற பல கோணங்களில் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

Views: - 672

0

0