நெஞ்சுவலியால் மருத்துவமனைக்கு வந்த நபர்….கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…உயிரிழந்த நோயாளி…!!

3 November 2020, 4:52 pm
Quick Share

வேலூரில் நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுக்க CMC மருத்துவமனைக்கு வந்தவருக்கு கொரோனா சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் கனேசன். இவர் கடந்த 30ம் தேதி நெஞ்சுவலி காரணமாக CMC அவசர பிரிவில் உறவினர்களால் அனுமதிக்கபட்டு உள்ளார். ஆரம்பகட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ சோதனைகள் எடுக்கபட்ட நிலையில், இவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரானா பிரிவுக்கு மாற்றபட்டுள்ளார்.

கொரோனா பிரிவுக்கு மாற்றிய உடன் இவருக்கு நெஞ்சு வலிக்கு மருத்துவம் பார்க்காமல் கொரானாவிற்க்கு மருத்துவம் பார்க்கபட்டு உள்ளது. மேலும் இவருக்கு தோசையும், குருமாவும் வழங்கபட்டதாகவும் நெஞ்சுவலி நோயாளிக்கு எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு எப்படி கொடுக்கப்பட்டது என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தவறான சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் கணேசன் இறந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் சடலத்தை வாங்காமலும், மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் CMC பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Views: - 21

0

0