இராமகோபாலன் மறைவிற்கு மவுன ஊர்வலம் : கோவையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

Author: Udayachandran
12 October 2020, 2:22 pm
Ramagopalan Rally - Updatenews360
Quick Share

கோவை : ஆலந்துறையில் இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் மறைவையொட்டி நடைபெற்ற மௌன ஊர்வலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை ஆலந்துறை பகுதியில் இந்து முன்னனி சார்பில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆலந்துறை ஹை ஸ்கூல் பகுதியில் துவங்கிய இந்த ஊர்வலம் ஆலந்துறை கருமாரியம்மன் கோவில் திடல் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று நிறைவடைந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ராமகோபாலனின் உருவப்படம் வைக்கபட்டு இருந்தது. கருமாரியம்மன் கோவில் திடலில்
வைக்கப்பட்டிருந்த ராமகோபாலனின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தபட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, கோட்ட செயலாளர் சதிஷ், மாவட்ட பொது செயலாளர் ஜெய் சங்கர்மாவட்ட செயலாளர் ரமேஷ், சதிஷ், செல்வா மற்றும் செய்தி தொடர்பாளர் தனபால், நாக சக்தி பீடத்தின் நிறுவனர் வக்கீல் ரங்கராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளர் வைரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மவுன ஊர்வலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Views: - 46

0

0