முன்னாள் காதலியுடன் போட்டி போட தயாரான சிம்பு..? இது புது ரூட்டாவுல இருக்கு..!

Author: Rajesh
27 April 2022, 2:23 pm

சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே அதில் சம்பாதிக்கும் பணத்தை எதிர்காலத்தில் பயன்படும் விதமாக ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து வருவது நடிகர், நடிகைகளின் வழக்கம். அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் பல தொழில்களின் முதலீடு செய்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் சிம்பு துபாயில் இருக்கும் அவரது நண்பர்களை நேரில் அழைத்துப் பேசி, அங்கு பிசினஸ் என்ன செய்யலாம் என்று டிஸ்கஸ் செய்து வருகிறாராம் சிம்பு. இதற்காக துபாய் கிளம்பிய நடிகர் சிம்பு, அதை முடித்து விட்டு வரும் மே இரண்டாம் தேதி சிம்பு சென்னை திரும்புகிறாராம்.

இதனிடையே, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். தான் சம்பாதிக்கும் பணத்தை ஏற்கனவே நயன்தாரா பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். நயன்தாரா மட்டுமின்றி, நடிகைகள் பலரும் ரியல் எஸ்டேட், விவசாயம், ஹோட்டல், சுற்றுலாத்தலம் போன்றவற்றில் முதலீடு செய்து அவர்களது எதிர்காலத்தை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நயன்தாரா சமீபத்தில் ‘தி லிப் பாம்’ என்ற அழகு சாதன பொருட்கள் கம்பெனியைத் தொடங்கினார். இதுதவிர துபாயில் மசாலா கம்பெனி மற்றும் ஆயில் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார்.

சிம்பு முதன்முதலாக காதலித்த நடிகை தான் நயன்தாரா. நயன்தாரா தற்போது காதலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் விரைவில் திருமணமாக உள்ள நிலையில், நயன்தாராவிற்கு போட்டியாக சிம்பு தொழில் தொடங்க இருப்பது சினிமா வட்டாராத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!