சிங்கப்பூர் கப்பல் மோதி விபத்து ஏற்படுத்திய விவகாரம் : மாயமான குமரி மீனவர்கள் சடலமாக மீட்பு!!

15 April 2021, 4:01 pm
Fisherman body Rescue -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கர்நாடக மாநில ஆழ் கடல் பகுதியில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த போது நேற்று முன் தினம் சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் குமரி மீனவர்களின் இருவர் சடலம் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற மீனவர் உட்பட தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்களும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 மீனவர்கள் கேரளா மாநிலத்தில் இருந்து கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில்  ஜாபர் என்பவருக்கு சொந்தமான அரப்பா என்ற மீன்பிடி விசைப்படகில் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த சிங்கப்பூரை சார்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கி பேராபத்து ஏற்பட்டது.

இதில் தமிழகத்தை சார்ந்த வேல்முருகன் என்ற மீனவரும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த சுனில் தாஸ் என்ற மீனவரும் உயிரோடு விபத்து ஏற்படுத்திய சிங்கப்பூர் கப்பல் ஊழியர்கள மீட்டுள்ளனர். மேலும் மூன்று மீனவர்களின் உடல்கள்  இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 

அவர்களது உடல் கர்நாடகா மாநிலம் மங்களாபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டு உள்ளது. அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறபட்டது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்ற மீனவ பிரதிநிதிகள் மூலம் அலெக்ஸ்சாண்டர், தாசன் ஆகிய இரு மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர்கள் மேலும் ஒரு மீனவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என அடையாளம் செய்யப்பட்டது.

கடலில் மாயமான 9 மீனவர்களை தேடும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மீனவர்கள் ஹென்லின் அலெக்சாண்டர் (வயது 38), தாசன் ஆகிய இரு மீனவர்கள் உடல் சொந்த ஊரான குளச்சல் வந்தடைந்தது. ஊர் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Views: - 26

0

0