அதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது!!

27 January 2021, 7:32 pm
Sirkazhi Arrest - Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் மனைவி மற்றும மகனை கொலை செய்து 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த விவகாரத்தில் மேலும் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் (வயது 50). அவர் சீர்காழி அடுத்த தர்மபுரம் பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். மேலும் தங்கம் வெள்ளி நகை மொத்த வியாபாரத்தையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் இன்று காலை ஆறு மணி அளவில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர். கதவை திறந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளே சென்ற வடமாநிலத்தவர்கள் தன்ராஜ் மனைவி ஆஷா (வயது 45),மகன் அகில் (வயது 24) ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.

தன்ராஜ் மற்றும் மருமகள் நெக்கல், இருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து வீட்டின் படுக்கை கட்டில் அடியில் வைத்திருந்த 16 கிலோ தங்க நகைகள் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தன்ராஜின் காரை திருடிக் கொண்டு ஐந்து பேரும் தப்பி சென்றனர்.

இதையடுத்து, போலீசார் நடத்தி விசாரணையில் 5 பேர் கொண்ட வடமாநில கும்பல் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் எருக்கூர் கிராம வயல்பகுதியல் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் 2 பேரை பொதுமக்களே விரட்டி பிடித்தனர். அப்போது வயல் வெளியில் இருந்து கொள்ளையன் தப்பியோட முயன்றபோது போலீசாரை தாக்க முயற்சித்துள்ளார். உடனே கொள்ளையனை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்றனர்.

4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் 16 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல்

இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கருணாராம், கும்பகோணத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கும்பகோணத்தில் பதுங்கியிருந்த கருணாரம் என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது மூவரையும் காரில் கொன்று சென்று விட்டது கருணாராம் தான் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.