சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2021, 4:24 pm
Shivashnakar Baba-Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் ஸ்ரீ சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர் சிவசங்கர் பாபா மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தின் உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதில், ஒரு வழக்கில் 300 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையைச் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, சிவசங்கர் பாபா மீது மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது போக்ஸோ வழக்கில் அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் சிவசங்கர் பாபா வின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த சூழ்நிலை இன்று மீண்டும் செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே.பி தமிழரசி வரும் 13-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

Views: - 305

0

0