ராமேஸ்வரத்தில் கடல்நீரை வானம் உறிஞ்சும் காட்சி…!!

5 November 2020, 9:25 am
water sea - updatenews360
Quick Share

ராமேஸ்வரத்தில் கடல்நீரை வானம் உறிஞ்சும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடல்நீரை வானம் உறிஞ்சும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்ததாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் ஏற்படும் அதிசயம் நிகழும்.

இந்நிகழ்வில், கடல்நீரை வானம் வேகமாக உறிஞ்சி மேகமாக மாற்றுகிறது. காற்றின் வெப்பநிலை சீரானதும் சுழல் மறைந்துவிடுகிறது.

ராமேஸ்வரம் கடல்பகுதியில் ஏற்பட்ட இந்த நிகழ்வை மீனவர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Views: - 17

0

0