ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு : காவல் கண்காணிப்பாளரிடம் மனு!!

Author: Udayachandran
16 October 2020, 1:14 pm
Caste Riots - Updatenews360
Quick Share

கோவை : ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென் இந்திய பார்வட் பிளாக் கட்சியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

நடிகர் கமலஹாசன் நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் வரும் ‘போற்றிப்பாடடி பொண்ணே’ என்ற பாடலை வைத்து தேவர் சமுதாய மக்களை குற்றப்பரம்பரை என்று கூறி பேஸ்புக் பக்கத்தில் தோழர் வசுந்தரா என்ற பெயரில் தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தென்னிந்திய ஃபார்வட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் சஞ்ஜெய் குமார் இன்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் அவதூராக பேசிவரும் தோழர் வசுந்தரா என்ற பெயரில் உலாவுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.” என்றார்.

Views: - 61

0

1