பொது இடங்களில் இறைச்சிக்காக விலங்குகளை வதை செய்ய தடை: மாநகராட்சி ஆணையர் விசாகன் அறிவிப்பு
2 September 2020, 8:27 pmமதுரை: பொது இடங்களில் இறைச்சிக்காக விலங்குகளை வதை செய்ய தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் வெளியிட்ட செய்தி குறிப்பில், “மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொது வெளியில் சுகாதாரமற்ற முறையிலும், அருவருக்கதக்க வகையில் விலங்குகள் இறைச்சிகாக வதை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆடு, மாட்டை வதை செய்ய வேண்டும், உச்சநீதிமன்ற வழிகாட்டல் குறித்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, தடையை மீறி பொது இடங்களில் இறைச்சிக்காக விலங்குகள் வதை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் விசாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0
0