ஜெனரேட்டரில் இருந்து வந்த புகை.. உறங்கி கொண்டிருந்த 2 பேர் மூச்சு திணறி பலி : உதகையில் நடந்த தீப நிகழ்ச்சியில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 10:11 am
Ooty 2 Dead -Updatenews360
Quick Share

நீலகிரி : ஊட்டி அருகே தீப விழா நிகழ்ச்சியில் ஜெனரேட்டரில் இருந்து வந்த புகையால் மூச்சு திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி அருகே சோலூர் கிராமத்தில் ‘ தெவ்வப்பா’ வின் ஒரு பகுதியாக அங்குள்ள ‘ தொட்டமனை’ யில் தீப விளக்கு நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்றனர். நேற்றிரவு வீசிய பலத்த காற்றுக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது.

ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி நிகழ்ச்சியை தொடர்ந்தனர். பின், நிகழ்ச்சி முடிந்ததும் 5 பேர் ‘ தொட்டமனை’யில் தங்கினர். ஜெனரேட்டலிருந்து வெளியேறிய புகை, தங்கிய அறை முழுவதும் பரவியது.
இதில், சிலர் கண் அயர்ந்து உறங்கியதால் புகை சூழ்ந்து மூச்சு திணறலால் சிலர் மயக்கமடைந்தனர். அதிகாலையில் அங்கு வந்த கிராம மக்கள் மயக்கமடைந்த நிலையில் இருந்த 5 பேரை மீட்டு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், சுபாஷ் (வயமு 36), மூர்த்தி (வயது 48), ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மற்ற மூன்று பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 172

0

0