உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தல்… கோவை விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய 3.73 கிலோ தங்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 9:16 pm
Cbe Airport - Updatenews360
Quick Share

கோவை விமான நிலையத்தில் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடைமைகளை மத்திய சிறப்பு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (34), கோவையை சேர்ந்த பிரியா(36) மற்றும் ஶ்ரீமதி (29) ஆகியோரை ஆய்வு செய்த போது, உள்ளாடைகள், மற்றும் மலக்குடலில் தங்க நகைகள், தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ரூ.2.19 கோடி மதிப்பிலான சுமார் 3.73 கிலோ தங்கங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 166

0

0