அமைச்சர் உதயநிதி, கோவை திமுக வேட்பாளருக்கு சிக்கல்…. சமூக ஆர்வலர்கள் அளித்த பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
18 April 2024, 8:36 pm

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் மீது சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காணப்பட்ட பகுதியில் கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் நெடுஞ்சாலையின் நடுவே பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளில் திமுகவினர் கட்சி கொடிகளை கட்டியதாகவும், நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வந்து சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நிறுத்தியதாகவும் கூறி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் வழக்கு பதிவு செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  • Vijay Deverakonda 12th Movie Update கேமியோ ரோலில் நடிகர் சூர்யா..பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இருந்து வெளிவந்த சர்ப்ரைஸ் அப்டேட்.!