மாமனாரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொன்ற மருமகன் : மேலும் இருவருக்கு அரிவாள் வெட்டு!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2021, 11:18 am
Father in Law Murder -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மாமனாரை துரத்தி துரத்தி வெட்டிக் கொன்ற மருமகன், தடுக்க வந்த மேலும் இருவரை சரமாரியாக வெட்டி தலைமறைவானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன் பழங்களை வண்டியில் வைத்து வியாபாரம் செய்து வருபவர் காளிமுத்து. இவரது மகன் ஈஸ்வரமூர்த்திக்கும் (வயது 32), ஆட்டோ கன்சல்டிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் மாரிமுத்து (வயது 45) என்பவரின் மகள் மைதிலி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

கணவன், மனைவி இரு வருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்று வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான வழக்கு தாராபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நேற்று மாலை ஏற்பட்ட குடும்ப தகராறில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஈஸ்வர மூர்த்தி உறவினர்கள் கார்த்திகேயன், செல்வகுமார், மணிகண்டன் ஆகியோர் தாராபுரம் உடுமலை சாலை கால்நடை மருத்துவமனை அருகே வேன் ஓட்டுனர்கள் உடன் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்துவை திடீரென அரிவாளால் வெட்டினர்.

இதனால் காயமடைந்த மாரிமுத்து உயிர் தப்பிக்க ஓடினார். அப்போது அந்த கும்பல் அவரை விடமால் ஓட ஓட விரட்டி துரத்தி வெட்டியதால் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தடுக்க வந்த மாரிமுத்துவின் மகன் மதன்குமார், அவரது நண்பர் வேன் ஓட்டுநரான முருகன் ஆகியோரையும் அரிவாளால் வெட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார் காயமடைத்த மதன்குமார், முருகன் ஆகியோரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தகராறில் மாமனாரை வெட்டிக்கொலை செய்த ஈஸ்வரமூர்த்தி, அவரது தந்தை காளிமுத்து, உறவினர்கள் மணிகண்டன், கார்த்தி, செல்வகுமார் ஆகிய 5 பேரும் தலைமறைவாக உள்ள நிலையில் தாராபுரம் டி.எஸ்பி தன்ராஜ் மற்றும் போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். தாராபுரம் நகரில் பட்டப்பக லில் ஓட ஓட விரட்டிச் சென்று ஒருவரை கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 577

0

0