தந்தையுடன் லாரியில் பயணம் செய்த மகன் “மர்ம மரணம்“! தந்தையிடம் போலீசார் விசாரணை!!

4 September 2020, 5:41 pm
Lorry Son Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே தந்தையுடன் லாரியில் பயணம் செய்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி மர்மமபான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற சதீஷ் (வயது 29) கூலி தொழிலாளியான செய்து வரும் இவருக்கு மனைவி வள்ளி(வயது 28) மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு கோவை அருகே தடாகம் என்ற இடத்தில் உள்ள ரம்யா சேம்பர் என்ற செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக தனது 8 வயது மகன் சங்கர் ,7வயது மகன் பொன்னர் ஆகியோருடன் செல்வம் அவ்வழியாக வந்த விறகு லாரியில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்,

அப்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோனேரிப்பட்டி என்ற இடம் அருகே வரும்போது ஓடும் லாரியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் சங்கர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினான். இந்நிலையில் கோவை தடாகத்திற்கு சென்ற செல்வம் லாரியில் தன்னுடன் பயணம் செய்த மகனை காணவில்லை என கோவை சூலூர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் தாராபுரம் கோனேரிப்பட்டி அருகே இன்று அதிகாலை 2 மணி அளவில்அடையாளம் தெரியாத நிலையில் லாரி சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்கி கிடந்த 8 வயது சிறுவனின் உடலை கைப்பற்றிய மூலனூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கோவை சூலூர் போலீசில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது செங்கல் சேம்பர் தொழிலாளி செல்வத்தின் மகன் சங்கர் என்பது தெரியவந்தது.

சிறுவன் சங்கர் ஓடும் லாரியில் இருந்து தவறி விழுந்தது கூட தெரியாமல் அவனது தந்தை செல்வம் லாரியில் பயணம் செய்தாரா அல்லது லாரியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டானா என்பது குறித்து மூலனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார். லாரியில் சிக்கி உயிரிழந்த சங்கர் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0