சோனியாவுக்கும், ஸ்டாலினுக்கும் தனது மகன்கள் மீது தான் கவலை : அமித்ஷா பேச்சு..

28 February 2021, 9:32 pm
Amit Shah - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பாஜக கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார்.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். பாரத நாட்டின் இனிமையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன்.

மன்கிபாத்தில் தமிழ் மொழியை படிக்க வேண்டும் திருவள்ளுவரை பற்றி படிக்க வேண்டுமென்ற ஆர்வமும் பாரத நாட்டின் தமிழ் மொழி இல்லாத கலச்சாரம் முழுமையடையாது. இந்த மண்ணில் பிறந்த பல மகான்கள் தமிழ்நாட்டின் எடுத்து சென்றுள்ளனர். நாடு முழுவதும் தமிழ் மொழியை மக்கள் மதிக்கிறார்கள்.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டனியோடு தேர்தலை சந்திக்க உள்ளோம், திமுக குடும்ப ஆட்சியில் தேர்தலை சந்திக்கிறார்கள். இந்த மண்ணில் பிறந்த பல மகான்கள் தமிழ்நாட்டின் எடுத்து சென்றுள்ளனர். நாடு முழுவதும் தமிழ் மொழியை மக்கள் மதிக்கிறார்கள்

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியோடு தேர்தலை சந்திக்க உள்ளோம், திமுக குடும்ப ஆட்சியில் தேர்தலை சந்திக்கிறார்கள். 2014 ஆண்டு முழு பெரும்பான்மையோடு ஆட்சி அமைந்தது.

நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் கால் அடி எடுத்து வைத்தபோது ஏழை மக்களுக்கான அரசாங்கமாக இருக்குமென மோடி கூறினார். ஏழு ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஒருவருக்கு கூட வீடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டு வருகிறது ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அது இல்லை.

நாட்டிலுள்ள 13 கோடி தலித் சமுதாய மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் மின்சாரம் செல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது. அதே போல் 2022 க்குள் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைக்கும் பணியை பாஜக மேற்கொண்டு வருகிறது.

ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் செலவு செய்ய மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பட்டியல் சமுதாய மலைவாழ் மக்களுக்காக 59 ஆயிரம் கோடி ரூபாய் உதவித்தொகை மாணவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் தலைவராக எம் ஜி ஆர் செயல்பட்டார்கள்.
எம்.ஜி.ஆரின் திட்டத்தினை ஜெயலலிதா செயல்படுத்தி வந்தார்கள். இத்திட்டத்தினை நாடு முழுவதும் மோடி செயல்படுத்தி வருகிறார். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளை அழித்தது மோடி அரசு. ராணுவ பாதுகாப்பாக இருந்தாலும், பொருளாதாரத்திலும் சிறப்பாக பாஜக அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது.

சோனியகாந்திக்கு தனது மகனை பிரதமராக்க வேண்டும், ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என குடும்ப அரசியல் கட்சியாக செயல்படுகிறது. ஊழல் பற்றி திமுக பேசும்போது சிரிப்பாக உள்ளது 2 ஜி ஊழல் செய்தது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மிகச் சிறப்பாக கொரனோ காலத்தில் பணியாற்றினார்கள். நல்லாட்ச்சிக்கான விருதும், நீர் மேலாண்மைக்கான விருது தமிழகத்திற்கும் கிடைத்துள்ளது. மிகச்சிறந்த நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து வந்து சிறப்பாக பணியாற்றுகிறார்கள் வெளியுறவு துறை அமைச்சரும் தமிழகத்தை சார்தவர் சிறப்பாக பணியாற்றுகிறார்.

சாலை விரிவாக்க பணிக்காக தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி தமிழகத்திற்கு மோடி அரசு தந்துள்ளது. விவாயிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கணக்கில் மோடி அரசு செலுத்தியுள்ளது.

கொரனோ திட்டத்தில் விவசாயிகளுக்கு 30 ஆயிரம் கோடி தமிழக விவசாயிகளுக்கு தரப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழில் அறிவிப்புகள் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. பாஜக கட்சி ஆட்சி அமையும்போது வேல்யாத்திரை முழுமை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 9

0

0