எஸ்.பி.பி ரசிகர்களுக்காக எஸ்.பி.பி. சரண் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு!!

7 October 2020, 4:14 pm
SPB - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி நல்லடக்கம் செய்யப்பட்ட பண்ணை இல்லத்தில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த செல்லும் வழியில் அரிய புகைப்படங்களையும் அங்கு காட்சிப்படுத்தி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காண வருபவர்களை அவர் கடந்த பாதைகளை நினைவூட்டும் விதமாக அமைத்துள்ளனர்.

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நல்லடக்கம் செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் அமைந்த அவரது பண்ணை வீட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று எஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்திருந்தார்.

எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்.. சரண் வெளியிட்ட  லேட்டஸ்ட் வீடியோ | SP Balasubramaniyam health condition now being well :  his son saran released latest ...

இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டதை காண ஏராளமானோர் வந்த வண்ணம் இருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை அனைவரும் சென்று காணும் விதமாக தனி வழி ஏற்படுத்தி தனது தந்தை பாலசுப்பிரமணியம் அவர்களை நினைவு கூறும் விதமாக அவரின் அரிய புகைப்படங்களை அந்த இடத்தில் காட்சிப்படுத்தி எந்த நேரத்திலும் அவரது ரசிகர்கள் மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். இது அவரது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது .

அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பாடி தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி ரசிகர்களையும் தன் வசீகர குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 25ம் தேதி மரணம் அடைந்தது, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் வெளிநாடுகளில் வசிக்கும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போனது தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காண திரண்டு வந்தனர்.

இதனிடையே பண்ணை இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல சிரமம் இருந்த நிலையில் அதனைப் போக்கும் விதமாக தனி வழி ஏற்படுத்தி எந்தநேரத்திலும் பாடகர் பாலசுப்பிரமணியம் அடக்கம் செய்த இடத்தில் அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தனி வழி ஏற்படுத்தித் தந்து அவர்களின் ரசிகர்கள் பாராட்டும்படி செய்துள்ளார்..

Views: - 2

0

0