எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ.!!

20 August 2020, 5:28 pm
SPB Saran - Updatenews360
Quick Share

எஸ்பிபி உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என அவரது மகன் எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் வரை பாதிப்புக்க ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்களின் பிரார்த்தனையால் அவர் தமது தந்தை மீண்டு வருவார் என நம்பிக்கை உள்ளதாகவும், தந்தைக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் மாலை 6 மணிக்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனையில் ஈடுபட உள்ளது நினைவுகூரதக்கது.

#SPB health update 20/8/20 and Thanks to all the great people praying for my father. #spb

Charan Sripathi Panditharadhyula यांनी वर पोस्ट केले गुरुवार, २० ऑगस्ट, २०२०

Views: - 54

0

0