மனம் விட்டு பேசுங்க.. தொண்டர்கள் மன உளைச்சலில் இருக்காங்க : ஜிகே மணி வேண்டுகோள்!
Author: Udayachandran RadhaKrishnan5 July 2025, 11:47 am
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் ஜிகே மணி பேசியதாவது: பா.ம.க.வில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிப் பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை மன உளைச்சலில் உள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.

இருவரும் மாறி மாறி பேசுவதால் குழப்பமே ஏற்படுகிறது. டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து மனம் விட்டுப் பேசி தீர்வு காண வேண்டும். இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்தத் தீர்வும் ஏற்படாது.

பா.ம.க. மீண்டும் பழைய வலிமைக்கு உயர வேண்டும். இருவரும் ஒன்றிணைந்தால் மற்ற கட்சிகளுக்கு பேச இடமிருக்காது என்றார்.