பாலியல் புகாரால் கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி : புதிய அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு அதிரடி!!

24 February 2021, 7:12 pm
Spl DGP - Updatenews360
Quick Share

சென்னை : பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த விசாகா கமிட்டியை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாகா கமிட்டியில் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். அதில் சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமூண்டீஸ்வரி ஆகியோர் உள்ளனர். இந்த பாலியல் புகார் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகார் எதிரொலியால் கட்டாய காத்திருப்போ பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு சிறப்பு டிஜிபியாக கரண் சின்ஹா, காவல் பயிற்சி கல்லூரி சிறப்பு டிஜிபியாக ஷகீல் அக்தர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Views: - 12

0

0