மகா சிவராத்திரி: சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா ?

14 February 2020, 1:24 pm
Quick Share

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மாசி மாதம் மகா சிவராத்திரி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக மகா சிவராத்திரியை முன்னிட்டு கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • தாம்பரம்-நெல்லை(வண்டி எண்: 82603) இடையே சுவிதா சிறப்பு ரயில் வருகிற 20-ந்தேதி இரவு 8.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • நெல்லை-தாம்பரம்(82604) இடையே சுவிதா சிறப்பு ரயில் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.