அமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரீஸ்: பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு…!!

3 November 2020, 12:31 pm
kamala 1 - updatenews360
Quick Share

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற, திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் – ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

ஸ்டெனோகிராஃபர் ஆக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர். 1930-ம் ஆண்டு சாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

இவருக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர், கடந்த 2019-ம் ஆண்டில் trues we hold என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தனது தாத்தா பி.வி.கோபாலன் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் என்பதும், தங்கள் கிராமத்தை பூர்வீக பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவது பற்றிய தகவல் அறிந்த துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவர் வெற்றிபெற வேண்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் 2014 ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக கோயிலை நிர்வகித்து வரும் ரமணன் தெரிவித்தார். துணை அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் குடும்பத்தார் சார்பில் குலதெய்வ கோவிலான தர்மசாஸ்தா வழிபாடு நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 27

0

0