நள்ளிரவில் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்… Walking Stick-ஆல் தாக்கும் மாற்றுத்திறனாளி கணவர்…!!

Author: Babu Lakshmanan
29 June 2022, 6:26 pm

மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை அவரது மாற்றுத்திறனாளி கணவர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடிய மதுரை ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவு மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தனது மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அந்த மாற்றுத்திறனாளி கணவர், தான் பயன்படுத்தக்கூடிய வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி, அந்த நபரை சரமாரியாக தாக்குகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், யாரும் உதவிக்கு வராத நிலையில், தனது மனைவிக்கு நேர்ந்த செயலைப் பார்த்து ஆக்ரோஷமாக செயல்பட்டதற்கு, பலர் பாராட்டி வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?