யாசகம் கேட்பது போல் பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தூவி கொள்ளை: குமரியில் அதிர்ச்சி சம்பவம்…

Author: kavin kumar
2 December 2021, 3:47 pm
Quick Share

கன்னியாகுமரி: வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தூவி 25-சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டை அடுத்த மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் வெளிநாட்டு சரக்கு கப்பலில் பொறியாளர். இவரது மனைவி ஸ்ரீஜா. கடந்த 5-மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்ற பிரதீஷ்குமார் டிசம்பர் 1-ம் தேதியான நேற்று திருமண நாளை கொண்டாடும் விதத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் சொந்த ஊர் திரும்பிய நிலையில் 3-வது திருமண நாளான நேற்று நோய்வாய்பட்ட தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு திருமண கொண்டாத்திற்கான பொருட்களையும் வாங்கி வருவதாக மனைவியிடம் கூறி தாயுடன் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீஜா ஷாமிலி தனது கணவரின் தங்கை பிரதி என்பவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் முன் வந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கொண்ட குழு ஸ்ரீஜா ஷாமிலியிடம் யாசகம் கேட்டுள்ளது.

ஆனால் யாசகம் தர மறுத்த அவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தனது கணவரின் தங்கையிடம் கடந்த மூன்று நாட்களாக சந்தேகத்திற்கு இடமாக யாசகம் கேட்டு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இன்றும் யாசகம் கேட்டு வந்துள்ளதாக கூறிய நிலையில், அவர் முன் கதவை பூட்ட அறிவுறித்தினர். இதைதொடர்ந்து ஸ்ரீஜா ஷாமிலி முன்பக்க கதவை பூட்டிய நிலையில், சுதாகரித்து கொண்ட மர்ம கும்பல் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்து ஸ்ரீஜா ஷாமிலி முகத்தில் மயக்க மருந்து பொடியை வீசியுள்ளது. இதில் அரை மயக்கத்துடன் காணப்பட்ட அவரிடம் இருந்து அந்த கும்பல் தாலி சங்கிலி, வளையல், கம்மல் ஆயவற்றை கழற்றி வாங்கியதோடு கைக்குழந்தையை எடுத்து கொன்று விடுவதாக மிரட்டி பிரோவில் இருந்த நகைகள் என 25-சவரன் சுமார் பத்து லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து ஸ்ரீஜா ஷாமிலி மற்றும் கைக்குழந்தையை அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.

இதற்கிடையில் தனது அண்ணன் மனைவியின் செல்போன் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் நடத்து விட்டதாக எண்ணிய பிரதி தனது கணவருடன் அங்கு வந்து பூட்டப்பட்டிருந்த அறை கதவை திறந்து பார்த்த போது ஸ்ரீஜா ஷாமிலி கட்டிலில் கைக்குழந்தையுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்ததோடு மண்டைக்காடு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், டிஎஸ்பி தங்கராமன் மற்றும் செங்கோட்டு வேலவன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஜா ஷாமிலி மற்றும் அவரது கணவர் பிரதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 349

0

0