எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகள் இருவருக்கு மார்ச் 13 வரை காவல்

14 February 2020, 7:15 pm
UpdateNews360_Wilson
Quick Share

கன்னியாகுமரி : எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் காவல் மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜன., மாதம் 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் (57) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனர். மேலும், குற்றவாளிகளுக்கு உதவியதாக உசைன் ஷெரீப் என்பவரும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

UpdateNews360_Wilson

அதோடு, பயங்கரவாதிகளுக்கு நிதி பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, பிச்சைக்கனி, அமீா் மற்றும் முகமது அலி என்பவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை செய்தவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனிடையே, எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் காவல் மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply