புனித அந்தோணியார் திருவிழா… களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற காளையர்கள் : காவலர் உட்பட 40 பேர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 5:01 pm
Jallikattu - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவையொட்டி முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் போலீஸ் உட்பட 40 போ் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் தொகுதி கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 600- காளைகள் பங்கேற்றன.

கால்நடைத்துறை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்கு பின், 600 காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. அதேபோல் 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க வந்த நிலையில், 350 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வாடிவாசல் வழியாக காளைகள், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இதில் வெற்றி பெற்ற காளைகள்,மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ,கட்டில், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மாடு முட்டியதில் 15 வீரா்கள், 11 காளைகளின் உரிமையாளா்கள்,13 பாா்வையாளா்கள்,1 போலீஸ் என மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இதில் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 706

0

0