ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தேதியை அறிவித்தார் துரைமுருகன்!!
18 January 2021, 1:15 pmQuick Share
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் வரும் ஜனவரி 21ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Views: - 0
0
0