10வது பட்ஜெட்… பத்தாத பட்ஜெட்… ‘ரைமிங்காக’ விளாசித் தள்ளிய ஸ்டாலின்..!

14 February 2020, 2:11 pm
MKSTALIN-UPDATENEWS360
Quick Share

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாசித்த 10வது பட்ஜெட், பத்தாத பட்ஜெட் என்று, தமிழக பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துதுள்ளார்.

நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவையில் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து சட்டசபை வளாகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது.

தமிழக பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ. 4.56  லட்சம் கோடி என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொருவரின் தலை மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமத்தப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான எந்தவித தொலை நோக்கு திட்டங்களும் இல்லை. வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பும் இல்லை.

2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வரை 1 லட்சம் கோடியில் இருந்த கடன் தற்பொழுது மூன்று மடங்கு அதிகரித்து 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இலாகாவிற்கு மட்டும் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன? 

பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக டெல்டா அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு இங்கிருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி ஒரு கடிதத்தை கொடுத்ததாக செய்தி வந்தது.

அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்று சொல்லப்படவில்லை. இப்பொழுதும் சொல்கிறேன் இன்று மாலைக்குள் அந்த கடிதத்தில் என்ன இருக்கு என்று சொல்லியாக வேண்டும், அப்படி சொல்லவில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன் என்று ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply