சாலையில் நின்ற ஆட்டோவை திருடி சவாரி : வேலை இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாக கொள்ளையன் வாக்குமூலம்…

Author: kavin kumar
23 February 2022, 2:17 pm

சென்னை : கொடுங்கையூர் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோவை திருடிச் சென்று சவாரி ஓட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி. என்.டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் வயது 36. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இரவு சவாரி முடித்து விட்டு ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனந்த் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஆனந்த் நேற்று எழும்பூர் பகுதி அருகே தனது ஆட்டோவை வேறு ஒரு நபர் ஓடிச் செல்வதை பார்த்தார்.

உடனடியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவை பிடித்து ஆட்டோ ஓட்டி வந்த நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர் மாதவரம் தபால் பெட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(35) என்பதும் இவர் பெயிண் டிங் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. தற்போது எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் சம்பவத்தன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திருடி சென்று தினமும் அதை சவாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • We are lesbians.. Shocking video of Vijay TV serial actresses taking turns tying thali நாங்க லெஸ்பியன்.? விஜய் டிவி சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிய ஷாக் வீடியோ!