திருட்டு போன சைக்கிள் : முதல்வரை டேக் செய்து ட்வீட் : மீட்ட போலீசாருக்கு பறிகொடுத்தவர் நன்றியுடன் பாராட்டு..!

13 July 2021, 10:47 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூரில் தனது விலையுயர்ந்த சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததையடுத்து, அவரது சைக்கிளை போலீசார் மீட்டனர்.

திருவள்ளூரைச் சேர்ந்தவர் அர்சத் அஜ்மல். இவர் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். அந்த சைக்கிளில் அவ்வப்போது நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த சூழலில், கடந்த மாதம் 29-ந் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி அவரது சைக்கிளை ஒரு இளைஞர் திருடும் வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் திருடப்பட்ட சைக்கிளை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்ட நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருடப்பட்ட சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளனர். மேலும், இந்த பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் டேக் செய்துள்ளனர்.

Views: - 47

0

0