நடிகர் விஷால் வீட்டின் மீது கல் வீச்சு… காரில் வந்த மர்மநபர்கள் யார்? சிசிடிவி காட்சியுடன் போலீசில் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 10:10 pm

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர், நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமடைந்தது. இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இன்று நடிகர் விஷால் சார்பில் அவரின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சார்பில் சென்னை கே4 அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது . இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது…

சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர், நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமடைந்தது.

இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே இந்த புகாரை விசாரணைக்கு ஏற்று கொண்டு, அந்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!